/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாகனம் மோதி சேதமான தானியங்கி சிக்னல் கம்பம்
/
வாகனம் மோதி சேதமான தானியங்கி சிக்னல் கம்பம்
ADDED : பிப் 18, 2025 05:41 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம், திருத்தணி, திருப்பதி, ராணிப்பேட்டை, ஆற்காடு, வேலுார், பெங்களூரூ உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் ஒலிமுஹமதுபேட்டை வழியாக சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், அரக்கோணம் -- வேலுார் செல்லும் சாலை சந்திப்பில்,விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில், சோலார் மின்சாரத்தில் இயங்கும், தானியங்கி போக்குவரத்துசிக்னல் விளக்கு கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் இச்சாலையில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிக்னல் விளக்கு கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது.
சேதமடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

