ADDED : ஜன 07, 2025 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 11 வேத பண்டிதர்களுக்கு சிறப்பு விருது மற்றும் சன்மானம் வழங்கும் விழா, காஞ்சிபுரம் சங்கரமடத்தில் நடந்தது. இதில், காஞ்சிபுரம் மடாதிபதி விஜயேந்திரர், வேத பண்டிதர்களுக்கு பொன்னாடை அணிவித்து சன்மானம் மற்றும் ஆசி வழங்கினார்.
இதில், வேத பண்டிதர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆசி பெற்றனர். தொடர்ந்து, மஹா ஸ்வாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் தீபாராதனை மற்றும் புஷ்பாஞ்சலி சமர்ப்பித்த விஜயேந்திரர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.

