/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு
/
கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு
ADDED : நவ 23, 2024 07:39 PM
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடு, காந்தி நகர் இருளர் குடியிருப்பில், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, பள்ளி இடைநின்ற மாணவ- - மாணவியரை நேரில் சென்று சந்தித்தார்.
பின், மாணவ- - மாணவியரிடையே கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்ததினார். இதில், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், கல்விக்கு ஏழ்மை ஒரு தடையில்லை என்பதை மையப்படுத்தியும், தன் அனுபவம் வாயிலாக விளக்கினார்.
வினாக்களுக்கு சிறப்பான விடை அளித்த மாணவ- - மாணவியருக்கு, தமிழக முன்னாள் தலைமை செயலர் வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ்., எழுதிய புத்தகங்களை பரிசாக வழங்கி பாராட்டினார். பள்ளி இடைநின்ற மாணவ- - மாணவியரை பள்ளி செல்ல ஊக்குவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஊத்துக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர், தன்னார்வ கல்வியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.