/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : செப் 07, 2025 12:52 AM

காஞ்சிபுரம்:தமிழ்நாடு காவலர் தினத்தையொட்டி, சிவ காஞ்சி போலீஸ் நிலையத்திற்கு கள பயணம் மேற்கொண்ட காஞ்சிபுரம் தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் நிலையம் செயல்படும் விதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
காஞ்சி மஹா சுவாமிகளால் 1960ம் ஆண்டு, காஞ்சிபுரம் தண்டபாணி ஓரியண்டல் பள்ளி துவங்கப்பட்டது. இப்பள்ளி மாணவர்கள், தமிழ்நாடு காவலர் தினத்தையொட்டி, சிவ காஞ்சி போலீஸ் நிலையத்திற்கு நேற்று களப்பயணம் மேற்கொண்டனர். போலீஸ் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவு அலுவலகத்தையும் மாணவர்கள் பார்வையிட்டனர்.
அதை தொடர்ந்து, சிவ காஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர், போலீஸ் நிலையம் செயல்படும் விதம் குறித்தும், ஆன்லைன் மூலம் எவ்வாறு புகார் தெரிவிப்பது என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.
மேலும், பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபடும் குற்றவாளிகளை போலீசார் கண்டறிவது, சைபர் கிரைம் குற்றம், சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில் போலீஸ் அதிகாரிகளின் பங்கு மற்றும் பொறுப்புகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.