/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சமரச மையம் பற்றி விழிப்புணர்வு பேரணி
/
சமரச மையம் பற்றி விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 30, 2025 11:19 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், சமரச மையம் பற்றிய விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட முதன்மை நீதிபதி செம்மல் துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஜூலை 25 முதல், செப்டம்பர் 25 வரையிலான இரண்டு மாதங்களுக்கு சனி மற்றும் ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சமரச மையமும், ஸ்ரீபெரும்புதுார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சமரச மையமும் செயல்படுகிறது.
இம்மையத்தில், சமரச மையத்தில் நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகும்போது மனுதாரரது வழக்கை சமரச மையத்திற்கு அனுப்ப கோரலாம். சமரச மையத்தில் மனுதாரர்கள் எதிர்தரப்புடன் நேரடியாக பேச்சு நடத்தி சுமூக தீர்வை எட்டலாம்.
இதுகுறித்து, விழிப்புணர்வு பேரணி, காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி செம்மல் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாணவ - மாணவியர் பலரும் சமரச மையம் பற்றிய விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர்.
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வரை சென்ற பேரணி, அங்கு பயணியரிடையே சமரச மையம் பற்றிய விழிப்புணர்வு பிரசுரங்களை நீதிபதிகள் வழங்கினர்.
இந்நிகழ்வில், நீதிபதி கள் மோகனகுமாரி, மோகனாம்பாள், அருண்சபாபதி, திருமால், பென்னி ராஜன், சந்தியாதேவி, நவீன் துரை பாபு மற்றும் எஸ்.பி., சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.