/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தலை கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி
/
தலை கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 02, 2025 11:27 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், தலை கவசத்தின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை இணைந்து தலை கவசத்தின் அவசியம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோக்களில் தலை கவசத்தின் அவசியம் குறித்த வாசகம் அடங்கிய வில்லைகளை ஒட்டி, விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார்.
இப்பேரணி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி, மூங்கில் மண்டபம் வழியாக யாத்ரி நிவாஸ் வரையில், 200 இருசக்கர வாகனத்தில் தலைக்கவசத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகையுடன் சென்றனர். நிகழ்வில், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், காவல் துறை, போக்குவரத்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.