/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு பேரணி
/
இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 04, 2025 09:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:எஸ்.ஆர்.எம்., வேளாண் அறிவியல் கல்லூரி சார்பில், இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு பேரணி, உத்திரமேரூர் அடுத்த குப்பைநல்லூரில், நடந்தது.இதில், ரசாயன உர பயன்பாட்டை குறைத்து, இயற்கை விவசாயம் செய்வோம் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மேலும், இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து, பதாகைகள் ஏந்தியவாறு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், வேளாண் கல்லூரி மற்றும் லயோலா பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர்.