/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாதில் மஞ்சள் பை வழங்கி பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ADDED : ஏப் 27, 2025 01:50 AM

வாலாஜாபாத்:பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, வாலாஜாபாத் பாலாறு லயன்ஸ் மற்றும் திருவேணி அகடாமி பள்ளி சார்பில், வாலாஜாபாதில் நேற்று, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் துவங்கிய இப்பேரணி, ரவுண்டனா உள்ளிட்ட பகுதி வழியாக சென்று, பிளாஸ்டிக் ஒழித்து மஞ்சள் பை உபயோகித்தல் குறித்து வலியுறுத்தினர்.
'பிளாஸ்டிக் டம்ளரில் தண்ணீரு, பூமித்தாய்க்கு கண்ணீரு; பிளாஸ்டிக் மண்ணை மலடாக்கும், அதன் புகை கண்ணை குருடாக்கும்; பிளாஸ்டிக் எரிக்காதே, கேன்சர் நோயை பெருக்காதே' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பேரணியினர் கையில் ஏந்தி கோஷமிட்டனர்.
அப்போது, அச்சாலை வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் கடை வியாபாரிகளுக்கு 500 பேருக்கு மஞ்சள் பைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
வாலாஜாபாத் பாலாறு லயன்ஸ் சங்க தலைவர் அரிக்குமார் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், துணை தலைவர் முனுசாமி, செயலர் பாலசுப்ரமணியம், திருவேணி அகடாமி பள்ளி முதல்வர் ஆனந்த், அப்பள்ளி மாணவ - மாணவியர், ஆசிரியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.