/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இளம் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
/
இளம் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
இளம் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
இளம் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 30, 2025 11:50 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூரில் இளம் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
உத்திரமேரூரில், சினேகிதி வளர் இளம் பெண்கள் கூட்டமைப்பு சார்பில், இளம் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி, கூட்டமைப்பின் தலைவர் ரேணுகா தலைமையில் நேற்று நடந்தது.
உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். அம்பேத்கர் சிலை அருகே தொடங்கிய பேரணி, பஜார் வீதி, பேருந்து நிலையம் வழியாக சென்று தாலுகா அலுவலகம் அருகே முடிந்தது.
பேரணியில், வளர் இளம் பெண்களை பாதுகாக்கும் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும். மாற்றுத்திறன் கொண்ட இளம் பெண்களுக்கு ஏற்றவகையில், கல்வித் திட்டங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அதை தொடர்ந்து, பாலியல் தொல்லை, பின் தொடர்தல், பெண் குழந்தைகளிடம் மொபைல் போனில் தொந்தரவு செய்தல் ஆகியவை குறித்த புகார்களுக்கு '181' என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.