/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விழிப்புணர்வு பேரணி மஞ்சப்பை வழங்கல்
/
விழிப்புணர்வு பேரணி மஞ்சப்பை வழங்கல்
ADDED : ஏப் 11, 2025 01:33 AM

காஞ்சிபுரம்,:விதைகள் தன்னார்வ அமைப்பு, திரிவேணி அகாடமி சார்பில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு பேரணியும், பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணியை துவக்கி வைத்து, பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதைத் தடுக்கும் வழிகள் குறித்து பேசினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து பயணியர், போக்குவரத்து கழக ஊழியர்கள்,கடை உரிமையாளர்கள், நடைபாதை, நடமாடும் வியாபாரிகள், பொதுமக்கள் என, 500க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், காஞ்சி அன்னசத்திரம், அரக்கோணம் டான்போஸ்கோ வேளாண் கல்லுாரி மாணவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

