/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கலெக்டர் வளாகத்திலேயே முடிக்கப்படும் விழிப்புணர்வு பணி
/
கலெக்டர் வளாகத்திலேயே முடிக்கப்படும் விழிப்புணர்வு பணி
கலெக்டர் வளாகத்திலேயே முடிக்கப்படும் விழிப்புணர்வு பணி
கலெக்டர் வளாகத்திலேயே முடிக்கப்படும் விழிப்புணர்வு பணி
ADDED : மார் 17, 2024 02:09 AM

காஞ்சிபுரம்:லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அனைவரும் ஓட்டளிக்கும் வகையில், தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற, விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் வளாக மைதானத்தில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.
மேலும், கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம், ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், மகளிர் சுயஉதவிக் குழுவினர் கோலமிட்டனர். விடுமுறை நாளான சனிக்கிழமையான நேற்று, கலெக்டர் வளாகத்தில், பொதுமக்கள் யாரும் பார்க்க முடியாத வகையில், விழிப்புணர்வு கோலமிடும் பணி நடந்தது.
வாக்காளர்கள் பலரும் பார்க்கும் வகையில், விழிப்புணர்வு நடத்தாமல், கலெக்டர் வளாகத்திலேயே இதுபோன்ற விழிப்புணர்வு பணிகள் நடத்தப்படுவது குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.
கடந்த 2021ல், சட்டசபை தேர்தல் சமயத்திலும், தேர்தல் விழிப்புணர்வு கலெக்டர் வளாகத்திலேயே நடத்தி யது குறிப்பிடத்தக்கது.

