/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அய்யங்கார்குளம் கைலாசநாதர் ரிஷப வாகனத்தில் வீதியுலா
/
அய்யங்கார்குளம் கைலாசநாதர் ரிஷப வாகனத்தில் வீதியுலா
அய்யங்கார்குளம் கைலாசநாதர் ரிஷப வாகனத்தில் வீதியுலா
அய்யங்கார்குளம் கைலாசநாதர் ரிஷப வாகனத்தில் வீதியுலா
ADDED : டிச 10, 2025 08:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அய்யங்கார்குளம்: கார்த்திகை சோமவார பெருவிழாவையொட்டி, அய்யங்கார்குளம் கைலாசநாதர், காமகோட்டி அம்பாளுடன், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
காஞ்சிபுரம் அடுத்த, அய்யங்கார்குளத்தில் உள்ள காமகோடி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை சோமவார விழாவையொட்டி நேற்று முன்தினம், காலை 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மலர் அலங்காரமும் மஹாதீப ஆராதனையும் நடந்தது.
இரவு 7:00 மணிக்கு, கைலாசநாதர், காமகோடி அம்பாளுடன், மலர் அலங்காரத்தில், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மு க்கிய வீதி வழியாக உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.