/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கும்மாளமிடும் குரங்குகளால் கம்மாளம்பூண்டியினர் அச்சம்
/
கும்மாளமிடும் குரங்குகளால் கம்மாளம்பூண்டியினர் அச்சம்
கும்மாளமிடும் குரங்குகளால் கம்மாளம்பூண்டியினர் அச்சம்
கும்மாளமிடும் குரங்குகளால் கம்மாளம்பூண்டியினர் அச்சம்
ADDED : டிச 10, 2025 08:03 AM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம்,கம்மாளம்பூண்டி ஊராட்சியில், கூட்டமாக சுற்றித்திரிந்து சேட்டை செய்யும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், கம்மாளம்பூண்டி கிராமத்தில், 350க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், 50க்கும் மேற்பட்ட குரங்குகள், கூட்டமாக திரிகின்றன. வீட்டு தோட்டங்கள் மற்றும் வயல்வெளியில் உள்ள மா, வாழை, கொய்யா உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளையும் நாசம் செய்கின்றன.
வீட்டிற்கு வெளியே உலர வைக்கும் தானியங்களையும்,துவைத்து வெயிலில் உலர வைக்கும் துணிகளையும், டிஷ் ஆண்டெனா ஒயர்களையும் சேதப்படுத்தி விடுகின்றன.
சாலையில் நடந்து செல்வோரை அச்சுறுத்தும் வகையில், கடிக்க வருவதோடு, கையில் எடுத்து செல்லும் தின்பண்டங்களை பறித்துச் செல்கின்றன.
எனவே, கம்மாளம்பூண்டியில், கும்மாளமிட்டு கிராம மக்களுக்கு தொல்லை கொடுத்து வரும் குரங்குளை கூண்டுவைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

