/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வங்கி ஏ.டி.எம்.,களில் ரூ.500 மட்டுமே ரூ.100 மற்றும் ரூ.200 கிடைப்பதில்லை

ADDED : பிப் 15, 2025 07:47 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் முக்கிய சாலைகளில், அனைத்து வகையான வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்கள் செயல்படுகின்றன.
இந்த ஏ.டி.எம்.,மையங்களில் அவசர தேவைக்காக வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முயற்சிக்கும்போது, 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வருவதாக தெரிவிக்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு தேவையான, 100, 200 ஆகிய ரூபாய் நோட்டுகளை பெற முடிவதில்லை என, அந்தந்த வங்கிகளில் புகார் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், அதை வங்கி நிர்வாகங்கள் கண்டுகொள்வதாக இல்லை. தனியார், பொதுத்துறை வங்கிகள் என பல வங்கி ஏ.டி.எம்.,களில் இதே நிலை தான் நீடிக்கிறது.
காஞ்சிபுரத்திற்கு கோவில்களுக்கு தரிசனம் செய்ய வரும் வெளியூர் வாடிக்கையாளர்களும் இப்பிரச்னையை புகாராக தெரிவிக்கின்றனர்.
அதேபோல், பட்டு சேலை வாங்க வரும் வெளியூர் வாடிக்கையாளர்களும், அவசர தேவைக்காக 100, 200 ரூபாய் நோட்டுகளை பெற முடியவில்லை என தெரிவிக்கின்றனர்.
எனவே, 100, 200, 500 ஆகிய மூன்று வகையான நோட்டுகளையும் பெறக்கூடிய வகையில், ஏ.டி.எம்.,களில் நிரப்ப வேண்டும் என, வங்கி வாடிக்கையாளர்களும், காஞ்சிபுரத்திற்கு வரும் வெளியூர்வாசிகளும் தெரிவிக்கின்றனர்.