/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்க ஆலோசனை கூட்டம்
/
முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 22, 2024 07:42 PM
காஞ்சிபுரம்:தமிழ்நாடு மருத்துவ சமூக நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின், காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் குமார் தலைமையில் சாலவாக்கத்தில் நடந்தது.
இதில், சங்கத்தின் வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சலுான் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை எப்படி கவனிக்க வேண்டும். முடிதிருத்தும் தொழிலாளர்கள் தொழில் செய்யும் இடத்தில், பாதுகாப்புடன் பணி செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. செயலர் சுரேஷ் வரவேற்றார். பொருளாளர் கார்த்திக் நன்றியுரை கூறினார்.