/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கொசஸ்தலை ஆற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க பசுமை நிழல் வலை குடிலால் தடுப்பு

ADDED : நவ 10, 2024 12:54 AM

காஞ்சிபுரம்,:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், சேந்தமங்கமலம் கிராமத்தில் இருந்து, நெமிலி பேரூராட்சி வழியாக, பானாவாரம் செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலை குறுக்கே, 300 மீட்டர் நீளத்திற்கு கொசஸ்தலை ஆற்றின் தரைப்பாலம் செல்கிறது. இந்த தரைப்பாலத்தின் வழியாக, காஞ்சிபுரத்தில் இருந்து சேந்தமங்கல் வழியாக பானாவாரம், சோளிங்கர் வரை மற்றும் பனப்பாக்கம், சோளிங்கர், சேந்தமங்கலம் வழியாக, காஞ்சிபுரம் அரசு மற்றும் தனியார் தொழிற்சாலை வாகனங்கள் செல்கின்றன.
கொசஸ்தலை ஆற்றின் தரைப்பாலத்தின் இரு புறமும் தடுப்பு கம்பி இன்றி காணப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கோழி இறைச்சி மற்றும் உணவுக் கழிவுகளை கொசஸ்தலை ஆற்றில் கொட்டி ஆற்றை நாசப்படுத்தி வந்தனர்.
இதை தடுக்கும் விதமாக, கொசஸ்தலை ஆற்று பாலம் துவங்கும் இடத்தின் இரு புறமும் பசுமை நிழல் வலை குடில் அமைத்து தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.
மேலும், குப்பை கொட்டுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு பதாகை அமைத்துள்ளனர். பாலம் நிறைவு பெறும் இடத்தில், தடுப்பு ஏற்படுத்தவில்லை.
எனவே, மேம்பாலம் முடிவடையும் பகுதி இருபுறமும் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.