/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊராட்சிகளுக்கு வழங்காமல் வீணாகும் பேட்டரி வாகனங்கள்
/
ஊராட்சிகளுக்கு வழங்காமல் வீணாகும் பேட்டரி வாகனங்கள்
ஊராட்சிகளுக்கு வழங்காமல் வீணாகும் பேட்டரி வாகனங்கள்
ஊராட்சிகளுக்கு வழங்காமல் வீணாகும் பேட்டரி வாகனங்கள்
ADDED : ஏப் 03, 2025 01:48 AM

வாலாஜாபாத்:துாய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராமங்களில் குப்பை சேகரிக்க ஊராட்சிகள் தோறும் பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சிகளுக்கும், 2023 - 24ம் ஆண்டு, குப்பை சேகரிப்பதற்கான பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாலாஜாபாத் ஒன்றியத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளுக்கு கூடுதலாக பேட்டரி வாகனம் வழங்க 10 புதிய பேட்டரி வாகனங்கள் வரவைக்கப்பட்டு, வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், ஒரு மாதமாக நிறுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
முறையாக அவற்றை வினியோகம் செய்யாமல் திறந்தவெளியில், வெயிலில் நிறுத்தப்பட்டுள்ளதால், புழுதி படிந்து வீணாகி வருகிறது.
எனவே, இந்த வாகனங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு உடனடியாக வினியோகிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஒருவர் கூறியதாவது:
வாகனங்களுக்கு, வட்டார போக்குவரத்து அலுவலகம் வாயிலாக வழங்கப்பட வேண்டிய பதிவெண் வழங்கபடாமல் இருந்து, சமீபத்தில்தான் வழங்கப்பட்டுள்ளது.
பேட்டரி வாகனங்களை ஆய்வு செய்த அரசு அதிகாரிகளின் அறிக்கை வர வேண்டி உள்ளது. அதையடுத்து, விரைந்து வழங்கப்படும்,
இவ்வாறு அவர் கூறினார்.