/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கடற்கரை கைப்பந்து போட்டி தமிழக வீராங்கனையர் தங்கம்
/
கடற்கரை கைப்பந்து போட்டி தமிழக வீராங்கனையர் தங்கம்
கடற்கரை கைப்பந்து போட்டி தமிழக வீராங்கனையர் தங்கம்
கடற்கரை கைப்பந்து போட்டி தமிழக வீராங்கனையர் தங்கம்
ADDED : பிப் 11, 2025 12:51 AM

சென்னை, உத்தரகண்ட் மாநிலத்தில், 38வது தேசிய விளையாட்டு போட்டிகள், ஜன., 28 முதல் பிப்., 14ம் தேதி வரை நடக்கின்றன.
இரு தினங்களுக்கு முன், கடற்கரை கைப்பந்து போட்டி நடந்தது. இதில், ஆண்கள் பிரிவு இறுதி சுற்றில், திருவான்மியூர், நண்பர்கள் விளையாட்டு குழுவை சேர்ந்த வெங்கடேஷ், 24, விவேக், 29, ஆகியோர் விளையாடினர்.
இவர்களை எதிர்த்து, ஆந்திராவை சேர்ந்த இருவர் விளையாடினர். இதில், வெங்கடேஷ், விவேக் ஆகியோர் வெள்ளி பதக்கம் பெற்றனர்.
பெண்கள் பிரிவில், தமிழகத்தில் இருந்து பவித்ரா, 20, தீபிகா, 20, ஆகியோர் விளையாடினர். இவர்களை எதிர்த்து, புதுச்சேரியை சேர்ந்த இருவர் விளையாடினர்.
இதில், பவித்ரா, தீபிகா ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றனர். நால்வருக்கும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.