ADDED : ஜன 29, 2025 08:27 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியின், 75-வது வைர விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்கள் மற்றும் மக்கள் சுயதொழில் துவக்க தேனீ, காளான், வண்ண மீன் வளர்ப்பு பற்றிய பயிற்சி முகாம், கல்லூரி இளநிலை, முதுநிலை விலங்கியல் துறை சார்பில் நடந்தது.
கல்லுாரி முதல்வர் முனைவர் முருககூத்தன், இப்பயிற்சின் அவசியம் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முனைவர் வில்லியஸ் ஜேம்ஸ் தேனீ, காளான், வண்ண மீன்கள் வளர்ப்பு குறித்து, செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தார்.
பயிற்சியை முடித்த பின், சுயதொழில் துவக்குவதற்கான முதலீடு, அதற்கான கடன் வசதிகள் எங்கெங்கு கிடைக்கும் எனக் கூறினார். இதில், பச்சையப்பன் கல்லுாரி, செங்கல்பட்டு, செய்யாறு, அரக்கோணம், ஆரணி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அரசு கல்லூரி மாணவ- - மாணவியர் மற்றும் மக்கள் பங்கேற்றனர்.

