/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பட்டா பெற்ற பயனாளிகள் வீடு கட்டித்தர கோரிக்கை
/
பட்டா பெற்ற பயனாளிகள் வீடு கட்டித்தர கோரிக்கை
ADDED : அக் 08, 2024 12:46 AM

காஞ்சிபுரம், உத்திரமேரூர் தாலுகா, காவித்தண்டலம் கிராமத்தில், மலைக்குறவன் இனத்தைச் சேர்ந்தவர் காமாட்சி, 60, இவரது குடும்பத்துடன் மேலும் மூன்று குடும்பத்தினர், காவித்தண்டலம்கிராமத்தில் கூடை பின்னும் தொழில் செய்கின்றனர்.
அங்குள்ள கூத்து மேடையிலும், மரத்தடியிலும், ரேஷன் கடை வாசலிலும் தங்கி குடும்பம் நடத்தி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக பட்டா கேட்டு வந்த இவர்களுக்கு, 4 ஆண்டுகளுக்கு முன், ஒரக்காட்டுப்பேட்டை ஊராட்சியில், வருவாய் துறையினர் பட்டா வழங்கினர்.
ஆனால், பட்டா வழங்கிய இடத்தில் வீடு கட்ட, ஊராட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவிப்பதாக பட்டா பெற்ற பயனாளிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதனால், மாற்று இடத்தில் பட்டா வழங்கப்படும் என வருவாய் துறையினர் சமாளித்து வந்தனர்.
ஆனால், 4 ஆண்டுகளாக மாற்று இடத்திலும் பட்டா வழங்காமல் அதிகாரிகள் அலைகழித்து வந்தனர். மழை, வெயிலில் 4 குடும்பத்தினரும் சிரமப்பட்டு வந்தனர்.
இதற்கிடையே, நான்கு குடும்பத்தினரும், கலெக்டர் அலுவலக வாசலில் பலமுறை தர்ணா போராட்டம் நடத்தினர். ஆனாலும், நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், கடந்த செப்.,30ம் தேதி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தின், கூட்டரங்கு வெளியே, காமாட்சி, 60, என்பவர் பெட்ரோல் பாட்டிலுடன் அமர்ந்து போராட்டத்தில்ஈடுபட்டார்.
போராட்டம் நடத்திய பெண்ணிடம் இருந்து, போலீசாரும், அதிகாரிகளும், பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி வீசினர்.
இதையடுத்து, மாற்று இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வருவாய் துறையினர் உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து, ஒரக்காட்டுப்பேட்டை ஊராட்சியிலேயே வேறுஇடத்தில், காமாட்சி, அம்மு, மகாதேவி, பொன்னி ஆகிய நான்கு பயனாளிகளுக்கும், கலெக்டர் கலைச்செல்வி நேற்று பட்டா வழங்கினார்.
பல ஆண்டுகளாக பட்டா வழங்காமல் இழுத் தடிக்கப்பட்டு வந்த நிலையில், 4 குடும்பத்தினருக்கும் பட்டா வழங்கியது மகிழ்ச்சிய என வர்கள் தெரிவித்தனர்.
ஊரக வளர்ச்சித்துறை சார்பில், வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.