/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குண்ணவாக்கம் - நெல்வாய் கூட்டுச்சாலை ரூ.15 கோடியில் சீரமைக்க பூமி பூஜை

ADDED : டிச 28, 2024 01:13 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், படூர் கூட்டுச்சாலையில் இருந்து, குண்ணவாக்கம் வழியாக நெல்வாய் கூட்டுச்சாலையை இணைக்கும் சாலை உள்ளது.
படூர், ஆனம்பாக்கம், சிறுமையிலுார், காட்டாங்குளம், அமராவதிபட்டிணம், குண்ணவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர், இச்சாலையை பயன்படுத்தி உத்திரமேரூர், மதுராந்தகம், புக்கத்துறை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இச்சாலையை இருவழி சாலையைாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் தீர்மானித்தனர். அதன்படி, அமராவதிபட்டணத்தில் துவங்கி, நெல்வாய் கூட்டுச்சாலை வரையிலான 9 கி.மீ., துாரம் கொண்ட சாலையை அகலப்படுத்துதல், சிறுபாலங்கள் அமைத்தல் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளில் வடிகால்வாய்கள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று கொடியசைத்து சாலை பணியை துவக்கி வைத்தார். இதில், நெடுஞ்சாலைத்துறை காஞ்சிபுரம் கோட்ட பொறியாளர் முரளிதரன், உதவி கோட்ட பொறியாளர் அனந்தகல்யாணராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.