/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ஜ.,
/
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ஜ.,
ADDED : பிப் 09, 2025 08:50 PM
காஞ்சிபுரம்:தமிழக பா.ஜ.,வில் கட்சி நிர்வாகிகள் பலருக்கும் புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ., கட்சிக்கு புதிய தலைவராக ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார். பா.ஜ., சமீபத்தில் அறிமுக கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், அனுமதியின்றி வாகன ஊர்வலம் வந்ததாகவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் சிவகாஞ்சி போலீசில், பா.ஜ.,வைச் சேர்ந்த 100 பேர், விஷ்ணுகாஞ்சி போலீசில் 36 பேர் என, 136 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேற்று பா.ஜ., பிரமுகர்கள் அதிசயகுமார், ஆறுமுகம் உள்ளிட்ட சில நிர்வாகிகளை விஷ்ணு காஞ்சி போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதையறிந்த பா.ஜ.,வினர், விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால், காஞ்சிபுரம் - -செங்கல்பட்டு சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

