நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்,:தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கோவையில், அனுமதியின்றி பேரணி நடத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதை கண்டித்து ஒன்றிய பா.ஜ., சார்பில் உத்திரமேரூர் பேருந்து நிலையம் முன், ஒன்றிய தலைவர் குமார் தலைமையில், நேற்று முன்தினம் இரவு 10: 00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.