/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் காந்தி சாலையில் மீண்டும் தடுப்பு அமைப்பு
/
காஞ்சிபுரம் காந்தி சாலையில் மீண்டும் தடுப்பு அமைப்பு
காஞ்சிபுரம் காந்தி சாலையில் மீண்டும் தடுப்பு அமைப்பு
காஞ்சிபுரம் காந்தி சாலையில் மீண்டும் தடுப்பு அமைப்பு
ADDED : ஜூலை 10, 2025 01:12 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காந்தி சாலையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், மூன்று வழி பாதைக்காக, மீண்டும் தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோத்சவம், கடந்த மே மாதம், 11ம் தேதி முதல், 20ம் தேதி வரை நடந்தது. இதில், ஏழாம் நாள் உத்சவமான மே 17ம் தேதி, தேரோட்டம் நடந்தது.
இதில், தேரோடும் வீதிகளான காந்தி சாலை, காமராஜர் வீதி, அன்னை இந்திரா காந்தி சாலை, மேற்கு ராஜ வீதி, கிழக்கு ராஜ வீதி உள்ளிட்ட பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ள மைய தடுப்பு தேரோட்டத்திற்கும், திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கும் இடையூறாக இருக்கும் என்பதால், நெடுஞ்சாலைத் துறையினர் இச்சாலையில் உள்ள மைய தடுப்புகளை அகற்றினர்.
இதில், காந்தி சாலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மூன்று வழி பாதைக்காக, மைய தடுப்புபோல அமைக்கப்பட்டிருந்த, 'பைபர் ஸ்டிக்'குகள் அகற்றப்பட்டன.
பிரம்மோத்சவம் முடிந்ததும், மைய தடுப்பிற்காக, இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.
தற்போது, இரும்பு தடுப்புகள் அகற்றப்பட்டு, பழையபடியே, 'பைபர் ஸ்டிக்'குகளை மைய தடுப்பாக அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.