/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தெருவை மறித்து மேடை வாகன ஓட்டிகள் அவதி
/
தெருவை மறித்து மேடை வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மார் 02, 2024 10:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:குன்றத்துார் பேருந்து நிறுத்தம் அருகே, லாலாசத்திரம் தெரு அமைந்துள்ளது. இங்கு, குன்றத்துார் நகராட்சி அலுவலகம், அரசு தொடக்கப்பள்ளி, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது.
மேலும், இந்த தெரு வழியாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, ஆம்புலனஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. லாலாசத்திரம் தெருவில், அரசியல் கூட்டம், அரசு நிகழ்ச்சிகளுக்காக சாலையை மறித்து மேடை அமைக்கப்படுகின்றன.
இதனால், பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, இங்கு மேடை அமைத்து கூட்டம் நடத்த தடை செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

