/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புளூ ஸ்கை கிரிக்கெட் 'லீக்' ஆர்.ஆர்., டொனெல்லி அபாரம்
/
புளூ ஸ்கை கிரிக்கெட் 'லீக்' ஆர்.ஆர்., டொனெல்லி அபாரம்
புளூ ஸ்கை கிரிக்கெட் 'லீக்' ஆர்.ஆர்., டொனெல்லி அபாரம்
புளூ ஸ்கை கிரிக்கெட் 'லீக்' ஆர்.ஆர்., டொனெல்லி அபாரம்
ADDED : ஜன 30, 2024 06:03 AM
சென்னை : புளூ ஸ்கை ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் லீக் போட்டியில், ஆர்.ஆர்., டொனெல்லி அணி, 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னையில், தி புளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், புளூ ஸ்கை ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடக்கின்றன. இவற்றில், ஒன்பது அணிகள் பங்கேற்று, தலா ஒவ்வொரு அணியும் எட்டு போட்டிகள் வீதம், 'லீக்' முறையில் மோதி வருகின்றன.
நேற்று முன்தினம் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில், ஜென்டில்மேன் யுனைடெட் மற்றும் ஆர்.ஆர்., டொனெல்லி அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆர்.ஆர்., டொனெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 25 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு, 232 ரன்களை குவித்தது.
சுதர்சன் ஆட்டமிழக்காமல், 69 ரன்களும், மெய்யரசன் 47 ரன்களும் அடித்தனர். அடுத்து பேட் செய்த ஜென்டில்மேன் யுனைடெட் அணி, 24.4 ஓவர்களில், 125 ரன்களில் 'ஆல் ஆவுட்' ஆனது.
இதனால், 107 ரன்கள் வித்தியாசத்தில், ஆர்.ஆர்., டொனெல்லி அணி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.