/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புளூ ஸ்கை கிரிக்கெட்: ரைசிங் ஸ்டார் அணி வெற்றி
/
புளூ ஸ்கை கிரிக்கெட்: ரைசிங் ஸ்டார் அணி வெற்றி
ADDED : பிப் 11, 2025 12:52 AM
சென்னை,
புளூ ஸ்கை கிரிக்கெட் போட்டியில், ராயபுரம் ரைசிங் ஸ்டார் அணி, 67 ரன்கள் வித்தியாசத்தில், சி.எம்.ஏ., அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
சென்னையில், தி புளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், ஸ்ரீ குருராகவேந்திரா, 'லீக் கம் நாக் அவுட்' கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.
இவற்றில், பல்வேறு மண்டலங்களில் இருந்து ஒன்பது அணிகள் பங்கேற்றன. தலா ஒவ்வொரு அணிகளும், எட்டு போட்டிகள் வீதம், 'லீக்' முறையில் மோதி வருகின்றன.
இதில், 'ஐ' மண்டலத்தின் முதல் அரையிறுதி போட்டி, நேற்று முன்தினம் சேத்துப்பட்டு எம்.சி.சி., மைதானத்தில் நடந்தது. போட்டியில், ராயபுரம் ரைசிங் ஸ்டார் மற்றும் சி.எம்.ஏ., - சி.ஜி.எம்., என்ற இரு அணிகள் மோதின.
'டாஸ்' வென்ற ரைசிங் ஸ்டார், முதலில் பேட்டிங் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 185 ரன்களை எடுத்தது.
அடுத்து பேட்டிங் செய்த, சி.எம்.ஏ., - சி.ஜி.எம்., அணியினர், 16.4 ஓவர்களில், 'ஆல் அவுட்' ஆகி, 118 ரன்களில் சுருண்டது.
இதனால், 67 ரன்கள் வித்தியாசத்தில் ரைசிங் ஸ்டார் அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

