/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் டிச., 19ல் புத்தக திருவிழா।?
/
காஞ்சியில் டிச., 19ல் புத்தக திருவிழா।?
ADDED : நவ 27, 2025 04:45 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 4வது ஆண்டாக, டிச., 19ம் தேதி, புத்தக திருவிழா நடத்த, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
காஞ்சிபுரத்தில், மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து, மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து புத்தக திருவிழாவை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், நான்காவது ஆண்டாக டிச., 19ம் தேதி, புத்தக திருவிழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த முறையும், கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே அரங்குகள் அமைக்கப்பட்டு, புத்தக திருவிழா நடைபெற உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அரையாண்டு தேர்வுக்கான விடுமுறையில், புத்தக திருவிழா நடைபெறுவதால், மாணவ --- மாணவியர் புத்தகங்களை வாங்கவும், படிக்கவும் வசதியாக இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

