ADDED : நவ 27, 2025 04:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கா ஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டு, திருக்காலிமேடு பாலாஜி நகர், சிந்தாமணி விநாயகர் கோவில் தெருவில், மூன்று மாதங்களுக்கு முன், பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது. இதையடுத்து, குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதி சீரமைக்கப்பட்டு பள்ளம் மூடப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயில், மீண்டும் உடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக வீணாக குடிநீர் வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதியில் மண் அரிப்பால் சாலை சேதமடைந்து வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.சீனுவாசன், காஞ்சிபுரம்.

