/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புத்தக திருவிழா சிறுகதை தொகுப்புகளை கேட்கும் வாசகர்கள் நாவல் புத்தகங்களும் அதிகளவு விற்பனை
/
புத்தக திருவிழா சிறுகதை தொகுப்புகளை கேட்கும் வாசகர்கள் நாவல் புத்தகங்களும் அதிகளவு விற்பனை
புத்தக திருவிழா சிறுகதை தொகுப்புகளை கேட்கும் வாசகர்கள் நாவல் புத்தகங்களும் அதிகளவு விற்பனை
புத்தக திருவிழா சிறுகதை தொகுப்புகளை கேட்கும் வாசகர்கள் நாவல் புத்தகங்களும் அதிகளவு விற்பனை
ADDED : பிப் 05, 2025 12:25 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட புத்தக திருவிழா, கடந்த 31ல், கலெக்டர் வளாக மைதானத்தில் துவங்கியது. ஏராளமான புத்தக அரங்குகளில், ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
வரும் 10ம் தேதி வரை நடைபெறும் புத்தக திருவிழாவில் எழுத்தாளர்களின் சொற்பொழிவு, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நான்காம் நாளான நேற்று, 'ஏன், எதற்கு, எப்படி...' என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானா, நவிழ்தரும் நுால் நயம் என்ற தலைப்பில், பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் பேசினர்.
இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில், 'புத்தகம் எனும் நண்பன்' என்ற தலைப்பிலும், 'ஆரோக்கிய சிற்றுண்டிகள்' எனும் தலைப்பில் மருத்துவர் சிவராமன் ஆகியோர் பேசுகின்றனர்.
அனைத்து வயதினருக்கும் புத்தக திருவிழாவில் ஏராளமான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம், சிறுகதை, நாவல் ஆகிய புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு, பல அரங்குகளில் வைக்கப்பட்டுள்ளன.
பிரபலமான எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பு, பிரபலமான நாவல் ஆகியவை அதிகளவில் விற்பனையாகின்றன. வரலாற்று நாவல்கள் ஏராளமானவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆங்கில மொழிபெயர்ப்பு நாவல்களை வாங்குவோரையும் இங்கு பார்க்க முடிகிறது.
சிறுகதை புத்தகங்களை விரும்பி படிப்போருக்கு, சமீபத்தில் வெளியான புத்தகங்களும் விற்பனைக்கு உள்ளன. புத்தக திருவிழாவிற்கு வரும் வாசகர்கள், வரலாறு, சமகால அரசியல், ஆன்மிகம் போன்ற புத்தகங்கள் வாங்குவோரை காட்டிலும், சிறுகதை, நாவல் புத்தகங்களை பலர் வாங்குவதை இங்கு பார்க்க முடிகிறது.
மாணவர்களுக்கு ஒரே இடத்தில் ஏராளமான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு, கலை நிகழ்ச்சிகளையும் சேர்த்து நடத்துவது உத்வேகத்தை அளிக்கிறது. குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், நடுத்தர வயதினர், முதியோருக்கும், இந்த புத்தக திருவிழா பயனுள்ளதாக உள்ளது.
- எஸ்.எழிலரசி,
காஞ்சிபுரம்.
பயனுள்ள புத்தகங்கள் பல காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. அதேசமயம், கடந்தாண்டை காட்டிலும் புத்தக அரங்குகள் குறைவு. மேலும், புத்தக விலையும் சற்று அதிகமாக உள்ளது. நான் கல்லுாரியில் பணியாற்றுகிறேன். விலை குறைவாக கிடைத்தால், மாணவர்கள் பலரும் வாங்குவர். ஒட்டுமொத்தமாக, அனைத்து புத்தகங்களும் இங்கு கிடைப்பதால் நன்றாக உள்ளது.
- ச.நீலமேகன்,
காஞ்சிபுரம்.