/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'ஹீட்டர்' பயன்படுத்தி வெந்நீர் வைத்த சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

ADDED : மார் 28, 2025 08:41 PM
குன்றத்துார்:குன்றத்துார் அடுத்த மணிமங்கலம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் மகன் தமிழரசு, 12. இவர், அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை, 10ம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு பொதுத்தேர்வு நடந்ததால், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மதியத்திற்கு பின் வகுப்புகள் நடந்தன.
தமிழரசு நேற்று மதியம் பள்ளிக்கு செல்ல, வீட்டில் இரும்பு பக்கெட்டில், 'வாட்டர் ஹீட்டர்' வாயிலாக தண்ணீரை சுடுபடுத்தி உள்ளார்.
தண்ணீர் சுடாகி விட்டதா என தொட்டுப்பார்த்தபோது, மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். இதில் மயக்கமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, முடிச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து, மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.