/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கடப்பா கல் விழுந்து சிறுவன் பரிதாப பலி
/
கடப்பா கல் விழுந்து சிறுவன் பரிதாப பலி
ADDED : பிப் 22, 2024 11:21 PM
கோவிலம்பாக்கம்,மேடவாக்கம் அடுத்த கோவிலம்பாக்கம், சத்தியா நகரைச் சேர்ந்தவர்பாஸ்கரன். இவரது 5 வயது மகன் கவின், நேற்று முன்தினம் மாலை, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது பக்கத்து வீட்டின் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கடப்பா கல்லைப் பிடித்து விளையாடியபோது, அந்த கல், சிறுவனின் மீது சாய்ந்துள்ளது. கல்லின் கீழே சிக்கி சிறுவன் மயங்கி உள்ளான்.
பெற்றோர் அவனை தேடிய நிலையில், கல்லுக்கு அடியில் சிறுவன் சிக்கியிருப்பது தெரிந்து, அவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.
மருத்துவர்கள் பரிசோதித்த போது, சிறுவன் கவின் ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது. பள்ளிக்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்.