/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை போடும் பணிக்கு தோண்டிய சிறுபாலம்; கட்டி முடிக்க கோரிக்கை
/
சாலை போடும் பணிக்கு தோண்டிய சிறுபாலம்; கட்டி முடிக்க கோரிக்கை
சாலை போடும் பணிக்கு தோண்டிய சிறுபாலம்; கட்டி முடிக்க கோரிக்கை
சாலை போடும் பணிக்கு தோண்டிய சிறுபாலம்; கட்டி முடிக்க கோரிக்கை
ADDED : அக் 22, 2024 07:49 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த, சிறுவாக்கம் கிராமத்தில் இருந்து, வரதாபுரம் கிராமம் வழியாக, சாமந்திபுரம் செல்லும் மூன்று கி.மீ., துார ஒன்றிய சாலை உள்ளது.
இச்சாலை வழியாக, மூலபட்டு, மணியாட்சி, சாமந்திபுரம், அரங்கநாதபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் மாணவ - மாணவியர் வரதாபுரம், சிறுவாக்கம் வழியாக ஈஞ்சம்பாக்கம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் கல்வி கற்க செல்கின்றனர்.
இந்த சாலையில், அதிக பாரம் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் செல்வதால், சாலை குண்டு, குழியுமாக சேதமடைந்துள்ளது. இந்த சாலை, 2 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
பணி ஒப்பந்தம் எடுத்தவரும், முதலில் தரைப்பாலங்கள் விரிவுபடுத்துவதற்கு சிறுவாக்கம், வரதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், பழைய தரைப்பாலத்தில் போடப்பட்ட பைப்களை தோண்டி எடுத்துள்ளனர்.
அந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்களுக்கு வசதியாக, மாற்று வழித்தடத்தையும் உருவாக்கி உள்ளனர். இன்னும் கட்டுமானப் பணிகள் துவக்கவில்லை.
இதனால், மூலப்பட்டு, சாமந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி வாகன ஓட்டிகள் சிறுவாக்கம் வழியாக, காஞ்சிபுரம் செல்ல முடியாத சூழல் உருவாகி உள்ளது.
எனவே, சிறுவாக்கம் - சாமந்திபுரம் இடையே சாலை போடும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

