/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உடைந்த நிலையில் மின்கம்பம் பஞ்சுபேட்டையில் விபத்து அபாயம்
/
உடைந்த நிலையில் மின்கம்பம் பஞ்சுபேட்டையில் விபத்து அபாயம்
உடைந்த நிலையில் மின்கம்பம் பஞ்சுபேட்டையில் விபத்து அபாயம்
உடைந்த நிலையில் மின்கம்பம் பஞ்சுபேட்டையில் விபத்து அபாயம்
ADDED : நவ 15, 2024 12:43 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை துணைமின் நிலையம் ஒட்டியுள்ள பெரிய தெரு, சந்து பகுதியில், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் ஒரு மின்கம்பத்தின் மையப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு சாய்ந்த நிலையில் உள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்தால், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம் முற்றிலும் சாய்ந்து விழுந்தால் மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள், பஞ்சுபேட்டை துணைமின் நிலையம் அருகில், உடைந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.