/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தெரு குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
தெரு குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : ஆக 30, 2025 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிகாபுரம்,
காஞ்சிபுரம் கன்னிகாபுரத்தில், தெரு குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி 27வது வார்டு, கன்னிகாபுரத்தில், வீடுகள், கடைகளின் கூடுதல் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தெரு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கன்னியம்மன், வேலாத்தம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தெரு குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக குடிநீர் வீணாகி வருகிறது.
எனவே, தெரு குழாய் உடைப்பை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

