/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பஸ் டிரைவர், நடத்துனரை தாக்கிய இருவருக்கு காப்பு
/
பஸ் டிரைவர், நடத்துனரை தாக்கிய இருவருக்கு காப்பு
ADDED : அக் 01, 2024 06:16 AM
திருத்தணி : காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, திருத்தணி வழியாக திருப்பதி நோக்கி நேற்று முன்தினம், இரவு,9:30 மணிக்கு, தடம் எண்:212எச்என்ற அரசு பேருந்து புறப்பட்டது.
பேருந்தில் ஓட்டுனர் அன்பு, 42; நடத்துனர் அன்பரசு, 42, என்பவர் பணிபுரிந்துக் கொண்டிருந்தனர்.
அந்த பேருந்தில் திருத்தணி நகரைச் சேர்ந்த நான்கு பேர் பயணம் செய்தனர். அப்போது டிக்கெட் வாங்குவதில் நடத்துனருக்கும், நான்கு பேருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, பேருந்து நள்ளிரவு திருத்தணி பேருந்து நிலையத்திற்கு வந்த போது, அப்போது மூன்று பேர் திடீரென பேருந்தில் ஏறி, நடத்துனர் மற்றும் ஓட்டுனரை கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில் காயமடைந்த இருவரையும் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, பேருந்து நிலையத்தில் இருந்த, 'சிசிடிவி' கேமரா வாயிலாக பதிவான காட்சிகளை வைத்து, விசாரணை நடத்தியதில், திருத்தணி செட்டி தெரு சேர்ந்தவர்கள் ஜெகன் என்கிற லோகேஷ், 25, மதன், 25 மற்றும் அனுமந்தாபுரம் மோகன், 26, என, தெரிய வந்தது.
அதை தொடர்ந்து போலீசார் நேற்று, லோகேஷ், மதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மோகனை தேடி வருகின்றனர்.