/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பணிமனையில் எலக்ட்ரீசியன் இல்லாததால் பஸ்கள் பராமரிக்கும் பணி பாதிப்பு
/
பணிமனையில் எலக்ட்ரீசியன் இல்லாததால் பஸ்கள் பராமரிக்கும் பணி பாதிப்பு
பணிமனையில் எலக்ட்ரீசியன் இல்லாததால் பஸ்கள் பராமரிக்கும் பணி பாதிப்பு
பணிமனையில் எலக்ட்ரீசியன் இல்லாததால் பஸ்கள் பராமரிக்கும் பணி பாதிப்பு
ADDED : ஆக 25, 2025 12:49 AM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் போக்குவரத்து பணிமனையில் எலக்ட்ரீசியன் பணியிடம் காலியாக இருப்பதால், பேருந்துகளின் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
உத்திரமேரூரில், அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இந்த பணிமனை மூலமாக சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம், வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு 38 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இங்கு, ஓட்டுனர், நடத்துனர், மெக்கானிக், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். போக்குவரத்து பணிமனையில் இருந்து தினமும் இயக்கப்படும் பேருந்துகள், நடையை முடித்துவிட்டு பராமரிப்பு பணிகளுக்காக பணிமனைக்கு திரும்பி வருகின்றன.
இந்நிலையில், போக்குவரத்து பணிமனையில் பேருந்துகளுக்கு பேட்டரி, விளக்குகள் ஆகியவற்றை எலக்ட்ரீசியன் பராமரித்து வந்தார்.
தற்போது, எலக்ட்ரீசியன் பணியிட மாறுதல் காரணமாக வெளியூருக்கு மாற்றப்பட்டார். இதனால், 15 நாட்களாக பேருந்துகளுக்கு பேட்டரி மற்றும் விளக்குகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள பணியாளர் இல்லாமல் உள்ளது.
மேலும், சில பேருந்துகளின் பேட்டரிகளை கவனிக்காமல் இருப்பதால், ஸ்டார்ட் செய்வதில் பிரச்னை இருந்து வருகிறது.
எனவே, உத்திரமேரூர் அரசு போக்குவரத்து பணிமனைக்கு, எலெக்ட்ரிசியன் பணியாளரை விரைந்து நியமிக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பேருந்து ஓட்டுனர் ஒருவர் கூறுகையில், 'பேருந்துகளுக்கு பேட்டரி பராமரிப்பு செய்யாததால், நடை செல்லும்போது ஆங்காங்கே நின்று விடுகிறது. பிறகு, பேருந்தை தள்ளி ஸ்டார்ட் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க, பேருந்தை ஆப் செய்யாமல் நிறுத்திவைத்து இயக்கப்பட்டு வருகிறது' என்றார்.
இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உத்திரமேரூர் அரசு போக்குவரத்து பணிமனையில் எலக்ட்ரீசியன் பணியிடம் காலியாக உள்ளது. விரைவில் பணியிடம் நிரப்பப்பட்டு, பேருந்துகளின் பராமரிப்பு பணிகள் தடையின்றி நடைபெறும்' என்றார்.