மாற்றுத்திறனாளிகளுக்கான பஸ் பாஸ் அவகாசம் நீட்டிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான பஸ் பாஸ் அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஏப் 05, 2025 01:09 AM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்:மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழக அரசால் இலவச பயணச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுதும் சென்று வருவதற்கும் கல்விபயிலும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், பணிக்கு செல்பவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்களுக்கும் 2024- - 25ம் ஆண்டுக் கான இலவச பஸ் பாஸ்வழங்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் பாஸ் மார்ச் 31ம் தேதி வரை செல்லத்தக்க வகையில் கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மேலும்மூன்று மாதங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, ஜூன் 30ம் தேதி வரை பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தைதொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
