/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜன 12, 2025 07:39 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் வாயிலாக, தொழுநோய் மருத்துவர், பேச்சுப்பயிற்சியாளர், செவித்திறன் பயிற்சியாளர், அறிவாற்றல் பழக்குனர் ஆகிய நான்கு பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் விபரங்களை, https://kancheepuram.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, சுய கையெழுத்து அளிக்கப்பட்ட சான்றிதழ்களின் நகல்களுடன், ஜன., 17ம் தேதி, மாலை 5:45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
நிர்வாக செயலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42A, ரயில்வே சாலை, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் - 631 501. என்ற முகவரிக்கு, நேரடியாகவோ அல்லது விரைவு அஞ்சல் வாயிலாகவோ அனுப்பலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.