/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'கபீர் புரஸ்கார்' விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
'கபீர் புரஸ்கார்' விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : டிச 12, 2024 10:25 PM
காஞ்சிபுரம்:தமிழக முதல்வரால், குடியரசு தின விழாவின்போது கபீர் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது மூன்று பிரிவுகளின் கீழ், வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்களான ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் ஆகியோர் நீங்கலாக, சமுதாய நல்லிணக்க செயலாற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவர்.
இந்த விருது சாதி இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிறசாதி, இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
விருதுக்கான விண்ணப்பம் http://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து, வரும் 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க, வேண்டுமென, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

