/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சமரச தீர்வு மையம் மூலம் வழக்குக்கு தீர்வு காண அழைப்பு
/
சமரச தீர்வு மையம் மூலம் வழக்குக்கு தீர்வு காண அழைப்பு
சமரச தீர்வு மையம் மூலம் வழக்குக்கு தீர்வு காண அழைப்பு
சமரச தீர்வு மையம் மூலம் வழக்குக்கு தீர்வு காண அழைப்பு
ADDED : ஜூலை 05, 2025 10:21 PM
காஞ்சிபுரம்:நீதிமன்ற வழக்குகளை சமரச தீர்வு மையம் வாயிலாக, தீர்வு காணலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட சமரச தீர்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட சமரச தீர்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மையம் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதுார் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் சமரச தீர்வு மையம் செயல்படுகிறது. இங்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் இருந்தும் பரிந்துரை செய்யப்பட்ட வழக்குகளுக்கும், தீர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இம்மையத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட வழக்குகளை, 60 நாட்களில் அல்லது 90 நாட்களுக்குள் சமரசம் மூலம் தீர்வு காணும் வகையில், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களில் சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் சமரச மையம் செயல்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

