/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பசுமை சாம்பியன் விருது விண்ணப்பிக்க அழைப்பு
/
பசுமை சாம்பியன் விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : பிப் 18, 2025 08:31 PM
காஞ்சிபுரம்:பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க, சிறப்பாக செயல்படும் பள்ளிகள், கல்லுாரிகள், வணிக வளாகங்கள், தனிநபர்கள் என, 100 பேருக்கு 'பசுமை சாம்பியன்' விருதும், 1 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படும்.
பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக செயல்படும் முன்மாதிரி பள்ளிகள், கல்லுாரிகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். பிளாஸ்டிக் ஒழிப்புக்கு அர்ப்பணித்த தனிநபர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின், www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர், ஒரகடத்தில் செயல்படும் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை வரும் 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.