/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நில வகைப்பாடு கோப்புகள் தேக்கம் தேர்தலுக்கு முன் ஒப்புதல் கிடைக்குமா?
/
நில வகைப்பாடு கோப்புகள் தேக்கம் தேர்தலுக்கு முன் ஒப்புதல் கிடைக்குமா?
நில வகைப்பாடு கோப்புகள் தேக்கம் தேர்தலுக்கு முன் ஒப்புதல் கிடைக்குமா?
நில வகைப்பாடு கோப்புகள் தேக்கம் தேர்தலுக்கு முன் ஒப்புதல் கிடைக்குமா?
ADDED : மார் 08, 2024 11:56 PM
சென்னை:சென்னையில், பெரிய அளவிலான மனைப்பிரிவுதிட்டங்கள், நில வகைப்பாடு மாற்றம் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல்அளிக்கும் அதிகாரம், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம் உள்ளது.
இதில் அதிகாரிகளுக்கு அப்பால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் குழும கூட்டத்தில் தான், ஒப்புதல் அளிக்க முடியும்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, தொழில்நுட்ப ஆய்வுகள் முடிந்த பல்வேறு கோப்புகள், இந்த குழும கூட்ட விவாதத்திற்கே செல்வதில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஆவணங்கள் சரியாக உள்ள கோப்புகள், ஒப்புதல் கிடைக்காமல் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே நடந்த கூட்டங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களுக்கான அரசிதழ் அறிவிக்கையும் இன்னும் வரவில்லை.
அதே நேரத்தில், கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில், 50 கோப்புகள் காத்திருக்கின்றன.
இதுகுறித்து கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:
மனைப்பிரிவு திட்டங்களை பொறுத்தவரை, பெரும்பாலான கோப்புகளை அதிகாரிகளே முடித்து விடலாம். இதற்கு ஏற்ற வகையில், அதிகாரப் பகிர்வும் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மனைப்பிரிவுகள் தொடர்பான நில வகைப்பாடு மாற்றம் கோப்புகளுக்கு, குழும கூட்டத்தில் தான் ஒப்புதல் அளிக்க முடியும். அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி அமைப்பு தலைவர் என, மக்கள் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
தற்போது, லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும்.
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, மக்கள் பிரதிநிதிகள் சி.எம்.டி.ஏ., கூட்டத்தில் பங்கேற்க முடியாது. இவர்கள் இல்லாத நிலையில், அடுத்த 3 மாதங்களுக்கு அதிகாரிகள் கூட்டம் நடத்த முடியாது.
எனவே, தேர்தல் அறிவிக்கை வரும் முன், நிலுவையிலுள்ள கோப்புகளை முடிக்க, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

