/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளி கட்டடம் சேதம் விபத்து தவிர்க்கப்படுமா?
/
பள்ளி கட்டடம் சேதம் விபத்து தவிர்க்கப்படுமா?
ADDED : நவ 28, 2024 11:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:-உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில்,சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த, 850 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு, பள்ளி கட்டடம் ஒன்று, சேதமடைந்து சிமென்ட் காரை பூச்சுகள், உதிர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டுள்ளன.
மேலும், கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள, தூண்களில் சிமென்ட் காரை உதிர்ந்து வருகின்றன. இதனால், எந்நேரமும் மாணவர்கள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, சேதமடைந்த கட்டடத்தை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.