/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாய் சீரமைப்பு பணி; அரைகுறை நீர்வளத் துறை அதிகாரிகள் அலட்சியம்
/
கால்வாய் சீரமைப்பு பணி; அரைகுறை நீர்வளத் துறை அதிகாரிகள் அலட்சியம்
கால்வாய் சீரமைப்பு பணி; அரைகுறை நீர்வளத் துறை அதிகாரிகள் அலட்சியம்
கால்வாய் சீரமைப்பு பணி; அரைகுறை நீர்வளத் துறை அதிகாரிகள் அலட்சியம்
ADDED : டிச 03, 2024 04:29 AM

காஞ்சிபுரம் : கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் பாலாறு, ஆந்திர மாநிலம் மற்றும் தமிழகத்தின் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வழியாக வயலுார் முகத்துவாரத்திற்கு வந்து வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் அணைக்கட்டு கால்வாய் வழியாக, காஞ்சிபுரம் மாவட்டம், தைப்பாக்கம் கம்பன் கால்வாயை பாலாற்று நீர் சென்றடைகிறது. இதன் வாயிலாக பல்வேறுஏரிகள் நிரம்புகின்றன.
இதில், தைப்பாக்கம் கிராமத்தில் இருந்து வதியூர், மேல்வெண்பாக்கம், கீழ்வெண்பாக்கம் ஆகிய கிராமங்களின் வழியாக, தென்னல் மற்றும் கோவிந்தவாடி ஏரியின் நீர்வரத்து கால்வாய் செல்கிறது.
இந்த கால்வாயை முறையாக பராமரிக்காததால், கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன.தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், கருவேல மரங்களை அகற்றி, தண்ணீர் செல்ல பாதை ஏற்படுத்த வேண்டும் என, விவசாயி கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
கோவிந்தவாடி ஏரி மற்றும் தென்னல் ஏரிக்கு தண்ணீர் பிரிந்து செல்லும்கீழ்வெண்பாக்கம் பகுதியில், தென்னல் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயின் இருபுறமும், ராணிப்பேட்டை மாவட்ட நீர்வளத் துறை அதிகாரிகள் சீரமைத்தனர்.
இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தவாடி ஏரிக்கு வலதுபுறமாக செல்லும்மக்ளின் கால்வாய்சீரமைக்கப்படவில்லை. இதனால், பாலாற்றில் வெள்ளப் பெருக்குஏற்படும்போது, கோவிந்தவாடி ஏரிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, கோவிந்தவாடி மக்ளின் கால்வாய்க்கு செல்லும் நீர்வரத்து கால்வாயின் இருபுறமும், கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.