/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேர்தல் தேதி எதிரொலி குறைதீர் கூட்டங்கள் ரத்து
/
தேர்தல் தேதி எதிரொலி குறைதீர் கூட்டங்கள் ரத்து
ADDED : மார் 17, 2024 02:26 AM
காஞ்சிபுரம்:லோக்சபா தேர்தல் நடைபெறும் நாள், வேட்புமனு தாக்கல், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாள் என தேர்தல் அறிவிப்புகளை, தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்., 19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.
இதன்வாயிலாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்தல் முன்னேற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், நடத்தை விதிமுறைகள் அமல்படுத்துவதற்கான பணிகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒருபகுதியாக, வாரந்தோறும் கலெக்டர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடியும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் மட்டுமல்லாமல், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட குறை கேட்பு கூட்டங்களும் தற்காலிமாக ரத்து செய்யப்படுகின்றன. கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை, கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்படும் பெட்டியில் போடலாம்.
அதேபோல, கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் என அனைத்து அரசு அலுவலகங்களிலும் கோரிக்கை மனுக்களுக்கு பெட்டி ஒன்று வைக்கப்படும். அவற்றில் மனுக்களை போட வேண்டும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

