ADDED : ஏப் 26, 2025 07:00 PM
விஷார்:இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை மற்றும் காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை சார்பில், பெண்களுக்கான கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் வாய் புற்றுநோய் கண்டறியும் முகாம் சங்க தலைவர் டாக்டர் ரவி தலைமையில் நேற்று நடந்தது. விஷார் ஊராட்சி தலைவர் கார்த்திக் முகாமை துவக்கி வைத்தார். செயலர் டாக்டர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார்.
அரசு மருத்துவர் டாக்டர் கலையரசி தலைமையிலான மருத்துவ குழுவினர், முகாமில் பங்கேற்ற பெண்களுக்கு கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் வாய் புற்றுநோய் குறித்து 122 பரிசோதனை செய்துக்கொண்டனர்.
துணை புரவலர் டாக்டர் விக்டோரியா கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அதற்கான அறிகுறிகள் மற்றும் தடுப்பூசி குறித்தும் விரிவாக பேசினார்.
இம்முகாமில், பொருளாளர் டாக்டர் ஞானவேல், டாக்டர் தண்யகுமார், துணைத் தலைவர் டாக்டர் நிஷாப்ரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.