ADDED : பிப் 16, 2025 08:23 PM
காஞ்சிபுரம்:அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய, மண்டல புற்றுநோய் மையத்தில், பெருங்குடல் புற்றுநோய் குறித்த கருத்தரங்கம் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சரவணன் தலைமையில் நடந்தது. திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
புற்று நோயியல் உதவி பேராசிரியர் டாக்டர் அஷ்வின் ஜெபர்சன் பால், சென்னை ரேலா மருத்துவமனை கதிர்வீச்சு புற்று நோயியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரகலாத் யாத்திரிராஜ், ஆகியோர் பேசினர். இதில், நேரடியாகவும், காணொளி காட்சி வாயிலாகவும் 100க்கும் மேற்பட்ட டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை புற்றுநோய் உயர் அறுவை சிகிச்சை துறை இணை பேராசிரியர், புற்று நோய் கல்வியியல் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலமுருகன் ஏற்பாடு செய்திருந்தார். மருத்துவ அதிகாரி சிவகாமி நன்றி கூறினார்.

