/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின்கம்பம் மீது கார் மோதி விபத்து: 3 பேர் காயம்
/
மின்கம்பம் மீது கார் மோதி விபத்து: 3 பேர் காயம்
ADDED : நவ 10, 2025 11:22 PM

வாலாஜாபாத்: வாலாஜாபாத் சாலையில் நிலைதடுமாறி சாலையோர மின்கம்பம் மீது கார் மோதியதில் மின்கம்பம் முறிந்து விழுந்தது.
செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி, நேற்று அதிகாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, வாலாஜாபாத் சாலை, கீழாண்டை ராஜவீதி பகுதியில் நிலை தடுமாறி, சாலையோர மின்கம்பம் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது.
இதில், மின்கம்பம் முறிந்து விழுந்து, காரின் முன்பக்க கண்ணாடி மற்றும் மேல்பகுதி சேதமடைந்தது. காரில் பயணித்த மூன்று பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்தால், மின்கம்பிகள் அறுந்து தாழ்வாக தொங்கியதோடு, அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாபாத் மின் ஊழியர்கள், சேதமான கம்பம் மற்றும் மின்கம்பிகளை சீரமைத்தனர்.

