/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உத்சவம்
/
மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உத்சவம்
ADDED : நவ 10, 2025 11:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா கோவிலில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உத்சவம் நேற்று விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள பாலதர்ம சாஸ்தா கோவிலில், எட்டாம் ஆண்டு பிரதிஷ்டை தினம், திருக்கல்யாண உத்சவம், கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று காலை 8:30 மணிக்கு பாலதர்ம சாஸ்தாவிற்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உத்சவம் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடந்தது.

